தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சிக்கல் இலங்கைக்கு மாத்திரம் அல்லாமல் உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை. எனவே, முடிந்தவரை எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த நாடு வங்குரோத்தானதால் எமக்கு எரிசக்தி கிடைக்காமல் போன ஒரு நிலை இருந்தது. இப்போது நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், உலகத்திடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நாம் சிக்கனமாகச் செயல்பட வேண்டும்.
சிக்கனமான ஒரு சமூகமாக நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும்? இந்த நெருக்கடியையும் எதிர்காலத்தையும் எதிர்கொள்ள எமக்குச் சாதகமான சூழல் உள்ளது.
முடிந்தால் மின்சார நுகர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள், பயணங்களைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.
QR என்பது ஒரு தொழில்நுட்பம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தாங்களாகவே நுகர்வைக் குறைத்துக் கொண்டால் QR அவசியப்படாது. தொழில்நுட்பம் முக்கியமல்ல. QR மூலமும் வழங்கலாம், பங்கீட்டு முறை (Ration) மூலமும் வழங்கலாம் அல்லது கூப்பன் முறை மூலமும் வழங்கலாம். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பொருத்தமானது QR முறைமையாகும்.
இப்போது எம்மிடம் உள்ள எரிபொருள் அளவை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, தேவையற்ற விடயங்களுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அது மக்களின் கையில்தான் உள்ளது.
எந்த வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மக்கள் மாறாமல் எமது நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைக்க முடியாது. என்றார்.
மின்சார நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் கோரிக்கை தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சிக்கல் இலங்கைக்கு மாத்திரம் அல்லாமல் உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை. எனவே, முடிந்தவரை எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த நாடு வங்குரோத்தானதால் எமக்கு எரிசக்தி கிடைக்காமல் போன ஒரு நிலை இருந்தது. இப்போது நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், உலகத்திடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நாம் சிக்கனமாகச் செயல்பட வேண்டும். சிக்கனமான ஒரு சமூகமாக நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும் இந்த நெருக்கடியையும் எதிர்காலத்தையும் எதிர்கொள்ள எமக்குச் சாதகமான சூழல் உள்ளது. முடிந்தால் மின்சார நுகர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள், பயணங்களைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். QR என்பது ஒரு தொழில்நுட்பம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தாங்களாகவே நுகர்வைக் குறைத்துக் கொண்டால் QR அவசியப்படாது. தொழில்நுட்பம் முக்கியமல்ல. QR மூலமும் வழங்கலாம், பங்கீட்டு முறை (Ration) மூலமும் வழங்கலாம் அல்லது கூப்பன் முறை மூலமும் வழங்கலாம். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பொருத்தமானது QR முறைமையாகும். இப்போது எம்மிடம் உள்ள எரிபொருள் அளவை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, தேவையற்ற விடயங்களுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அது மக்களின் கையில்தான் உள்ளது. எந்த வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மக்கள் மாறாமல் எமது நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைக்க முடியாது. என்றார்.