• Oct 28 2026

நடுக்கடலில் என்ன நடந்தது? கரை திரும்பாத மீன்பிடிப் படகு – 4 பேரின் நிலை தெரியாமல் தவிப்பு!

Chithra / Oct 28th 2026, 10:28 am
image


மாத்தறை, குடாவெல்ல கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களுடன் கூடிய மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த படகில் பயணித்த நான்கு மீனவர்களின் நிலை தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்காத நிலையில், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


காணாமல் போன மீன்பிடிப் படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


 

நடுக்கடலில் என்ன நடந்தது கரை திரும்பாத மீன்பிடிப் படகு – 4 பேரின் நிலை தெரியாமல் தவிப்பு மாத்தறை, குடாவெல்ல கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களுடன் கூடிய மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த படகில் பயணித்த நான்கு மீனவர்களின் நிலை தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்காத நிலையில், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.காணாமல் போன மீன்பிடிப் படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement