• Jan 11 2025

பிரதி சபாநாயகர் பதவிக்கும் வருகிறது ஆபத்து: எதிர்க்கட்சி அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 17th 2024, 8:38 am
image

 

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிக்கு எதிராக மருத்துவ சபையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். 

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவ கட்டளைச் சட்டத்தை மீறியே அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். 

விசேட வைத்தியருக்கான பட்டம் பெற வேண்டுமாயின் மருத்துவக் கல்லூரியில் சான்றிதழைப் பெற்றிருத்தல் அவசியம். 

அவர் அவ்வாறு சான்றிதழைப் பெற்றிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கும் வருகிறது ஆபத்து: எதிர்க்கட்சி அதிரடி அறிவிப்பு  பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிக்கு எதிராக மருத்துவ சபையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ கட்டளைச் சட்டத்தை மீறியே அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். விசேட வைத்தியருக்கான பட்டம் பெற வேண்டுமாயின் மருத்துவக் கல்லூரியில் சான்றிதழைப் பெற்றிருத்தல் அவசியம். அவர் அவ்வாறு சான்றிதழைப் பெற்றிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement