• Mar 19 2025

தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில்..!

Sharmi / Mar 19th 2025, 2:47 pm
image

நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திறந்த பிடியாணையைப் பெற்று கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ஷனக ரணசிங்க முன்வைத்த பிரேரணையின் மூலம் அவர் சரணடைந்தார்.

இதற்கிடையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதேவேளை, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அவரது சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவைப் பெற வந்தபோது, ​​பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி , மாத்தறை நீதவான் நீதிமன்றம்,  தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், குறித்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில். நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திறந்த பிடியாணையைப் பெற்று கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.ஜனாதிபதி சட்டத்தரணி ஷனக ரணசிங்க முன்வைத்த பிரேரணையின் மூலம் அவர் சரணடைந்தார்.இதற்கிடையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதேவேளை, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அவரது சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவைப் பெற வந்தபோது, ​​பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.கடந்த மாதம் 27 ஆம் திகதி , மாத்தறை நீதவான் நீதிமன்றம்,  தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.இந்தநிலையில், குறித்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement