அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கி இன்று காலை பயணித்த ரயில், இயந்திரக் கோளாறு காரணமாக மீரிகம ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பிரதான ரயில் மார்க்கத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயந்திரக்கோளாறால் குறித்த ரயில் பாதிக்கப்பட்டதால் பல திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இயந்திர கோளாறால் பாதிக்கப்பட்ட ரயிலை சீரமைப்பதற்காக இயந்திர பொறியியலாளர்கள் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கி இன்று காலை பயணித்த ரயில், இயந்திரக் கோளாறு காரணமாக மீரிகம ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பிரதான ரயில் மார்க்கத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இயந்திரக்கோளாறால் குறித்த ரயில் பாதிக்கப்பட்டதால் பல திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இயந்திர கோளாறால் பாதிக்கப்பட்ட ரயிலை சீரமைப்பதற்காக இயந்திர பொறியியலாளர்கள் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.