முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை அண்மையில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு, கடந்த12 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று காலை மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோனின் வழக்கில் அதிரடி அறிவிப்பு முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை அண்மையில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு, கடந்த12 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று காலை மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.