• Mar 10 2025

தேசபந்து தென்னகோனின் சொத்துக்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Chithra / Mar 9th 2025, 12:36 pm
image

 

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ப்படும் என பொதுப் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

மோதரையில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

இதன்படி, தேசபந்து தென்னகோன், தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய தற்போது பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தேசபந்து தென்னகோனுக்கு மறைந்துக்கொள்ள எவரேனும் உதவினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.

தேசபந்து தென்னகோனின் சொத்துக்களுக்கு ஆபத்து விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை  முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ப்படும் என பொதுப் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.மோதரையில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி, தேசபந்து தென்னகோன், தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய தற்போது பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.மேலும், தேசபந்து தென்னகோனுக்கு மறைந்துக்கொள்ள எவரேனும் உதவினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement