• Mar 12 2025

தேசபந்துவின் ரிட் மனு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Mar 12th 2025, 2:11 pm
image


மாத்தறை நீதிமன்றத்தால் தன்னைக் கைது செய்யப் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின் பரிசீலனை நிறைவுக்கு வந்துள்ளது. 

அதன்படி, குறித்த மனுவின் தீர்ப்பை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 28 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசபந்துவின் ரிட் மனு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாத்தறை நீதிமன்றத்தால் தன்னைக் கைது செய்யப் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின் பரிசீலனை நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி, குறித்த மனுவின் தீர்ப்பை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.இந்நிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 28 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement