குறைந்தது இரு வருடங்களுக்காவது பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புவதாக கலகொடை அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சில முக்கிய தகவல்களை வெளியிட வேண்டியுள்ளதால் குறைந்தபட்சம் இரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு விரைவில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது எனவும் அவர்கூறினார்.
'கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளை பெற்ற வேளைகூட சஜித்துக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
சஜித்தால் தற்போது நடத்தப்படும்நிகழ்வுகளுக்கு பெருந்திரளான மக்கள் வருகின்றனர். அவர் தன்னால் முடிந்தவற்றை வழங்குகின்றார். பேருந்து இல்லாத பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கப்படுகின்றது. ஆனால், அதற்கானநிதி மூலம் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
பேருந்து இல்லாத பாடசாலை ஒன்றுக்கு அது கிடைக்கின்றதே என சந்தோசப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இரு வருடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க ஆசை- ஞானசார தேரர் கருத்து குறைந்தது இரு வருடங்களுக்காவது பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புவதாக கலகொடை அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சில முக்கிய தகவல்களை வெளியிட வேண்டியுள்ளதால் குறைந்தபட்சம் இரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகிறேன். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருக்கின்றார்.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு விரைவில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது எனவும் அவர்கூறினார். 'கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளை பெற்ற வேளைகூட சஜித்துக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.சஜித்தால் தற்போது நடத்தப்படும்நிகழ்வுகளுக்கு பெருந்திரளான மக்கள் வருகின்றனர். அவர் தன்னால் முடிந்தவற்றை வழங்குகின்றார். பேருந்து இல்லாத பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கப்படுகின்றது. ஆனால், அதற்கானநிதி மூலம் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.பேருந்து இல்லாத பாடசாலை ஒன்றுக்கு அது கிடைக்கின்றதே என சந்தோசப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.