• May 09 2026

அபிவிருத்தியா? அழிவா? – ஒலுவில் துறைமுகத்தால் கடலில் கரையும் அம்பாறை கரையோரம்

Aathira / May 9th 2026, 1:50 pm
image

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மக்கள் மத்தியில் கடும் அச்சமும் வேதனையும் நிலவி வருகிறது. 

குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னரே கடலின் இயல்பான நீரோட்ட அமைப்புகள் மாற்றமடைந்து, பல கரையோரப் பகுதிகள் வேகமாக கடலுக்குள் சென்று வருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிப்பதாவது, 

ஒலுவில் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே கடலியல் நிபுணர்கள் எதிர்காலத்தில் கடுமையான கரையரிப்பு ஏற்படும் என எச்சரித்திருந்தனர். 

ஆனால் அந்த எச்சரிக்கைகள் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடல் உள்வாங்கும் நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் மருதமுனை, பாண்டிருப்பு, கல்லாறு போன்ற பகுதிகளும் எதிர்காலத்தில் கடலரிப்பு அபாயத்தை சந்திக்கக்கூடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

மாளிகைக்காடு பகுதியில் அமைந்திருந்த மையவாடி முழுமையாக கடலுக்குள் சென்று அழிந்துள்ளதாகவும், பல வீடுகள், மரங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்திய கடற்கரைப் பகுதிகள் கடலால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வலை உலர்த்திய மணற்பரப்புகள் கூட தற்போது கடலின் பகுதியாக மாறியுள்ளன.

“ஒரு துறைமுகத்தை அமைப்பதே அபிவிருத்தி அல்ல; அது மனித வாழ்வையும் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப எச்சரிக்கைகளை புறக்கணித்த அதிகாரிகள் மற்றும் திட்டத்தை முன்னெடுத்த நிறுவனங்கள் ஆகியோர் இந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைபெறுவது சாதாரண கடலரிப்பு அல்ல; தவறான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அபிவிருத்தியா அழிவா – ஒலுவில் துறைமுகத்தால் கடலில் கரையும் அம்பாறை கரையோரம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மக்கள் மத்தியில் கடும் அச்சமும் வேதனையும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னரே கடலின் இயல்பான நீரோட்ட அமைப்புகள் மாற்றமடைந்து, பல கரையோரப் பகுதிகள் வேகமாக கடலுக்குள் சென்று வருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிப்பதாவது, ஒலுவில் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே கடலியல் நிபுணர்கள் எதிர்காலத்தில் கடுமையான கரையரிப்பு ஏற்படும் என எச்சரித்திருந்தனர். ஆனால் அந்த எச்சரிக்கைகள் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடல் உள்வாங்கும் நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மருதமுனை, பாண்டிருப்பு, கல்லாறு போன்ற பகுதிகளும் எதிர்காலத்தில் கடலரிப்பு அபாயத்தை சந்திக்கக்கூடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.மாளிகைக்காடு பகுதியில் அமைந்திருந்த மையவாடி முழுமையாக கடலுக்குள் சென்று அழிந்துள்ளதாகவும், பல வீடுகள், மரங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்திய கடற்கரைப் பகுதிகள் கடலால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வலை உலர்த்திய மணற்பரப்புகள் கூட தற்போது கடலின் பகுதியாக மாறியுள்ளன.“ஒரு துறைமுகத்தை அமைப்பதே அபிவிருத்தி அல்ல; அது மனித வாழ்வையும் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இதேவேளை, திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப எச்சரிக்கைகளை புறக்கணித்த அதிகாரிகள் மற்றும் திட்டத்தை முன்னெடுத்த நிறுவனங்கள் ஆகியோர் இந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைபெறுவது சாதாரண கடலரிப்பு அல்ல; தவறான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement