• May 01 2026

தமிழ் மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்...!சிறிதரனுக்கு சம்பந்தன் அட்வைஸ்...!samugammedia

Ziya / Jan 22nd 2024, 7:43 pm
image

தமிழ் மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன் என தமிழரசு கட்சியின் தலைவரான சி.சிறீதரனிடம்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  இன்றையதினம்(22)  இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

இதன்போது சிறிதரனுக்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்த இரா.சம்பந்தன், இது மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தொண்டர்களின் தெரிவு. புதிய தலைவரான உங்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களும் நல்லாசிகளும் எப்போதும் இருக்கும். 

எங்களுடைய மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

அதேவேளை கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




தமிழ் மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்.சிறிதரனுக்கு சம்பந்தன் அட்வைஸ்.samugammedia தமிழ் மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன் என தமிழரசு கட்சியின் தலைவரான சி.சிறீதரனிடம்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  இன்றையதினம்(22)  இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சிறிதரனுக்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்த இரா.சம்பந்தன், இது மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தொண்டர்களின் தெரிவு. புதிய தலைவரான உங்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களும் நல்லாசிகளும் எப்போதும் இருக்கும். எங்களுடைய மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.அதேவேளை கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement