ஒரு அரசு தனது தவறை மறைப்பதற்கு தனி நபர்களை பலி ஆடுகளாக தேடியது. இதைத் தான் உலகில் எல்லா பேரரசுகளும் செய்கின்றன. பேரரசுகள் மட்டுமல்ல, ஸ்தாபிக்கப்பட்ட மதங்களும் காலத்துக்கு காலம் தங்கள் எதிரிகளுக்கு எதிராக இதைத்தான் செய்து வந்திருக்கின்றன என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்
ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் அமெரிக்க தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் அவர்கள் தனது சுயசரிதை பற்றி ஆங்கில மொழியில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'சமனற்ற நீதி" நூல் வெளியீடு நேற்று முன்தினம் (20) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் சிறப்புரையாற்றிய போதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ...
அரசியலில் அறம் உண்டா? நீதி உண்டா? இல்லை, இல்லவே இல்லை. அரசியலில் நிலையான நலன்கள் மட்டும் தான் உண்டு. தென்னாபிரிக்காவுக்கும் அதுதான். பலஸ்தீனத்துக்கும் அது தான். அமெரிக்காவுக்கும் அதுதான். இந்த அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீதியின்பாற்பட்டு கிடையாது. இது அரசுக்கும் - அரசுக்கும் இடையிலான உறவுக்கு இடையிலும் வரும். அரசுக்கும் - தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுக்குள்ளேயும் வரும். ராஜ் ராஜரட்ணத்துக்கும் அது தான் நடந்தது. அமெரிக்காவுக்கு பலி ஆடுகள் தேவைப்பட்டன. ஒரு அரசு தனது தவறை மறைப்பதற்கு தனி நபர்களை பலி ஆடுகளாக்க தேடியது.
வரலாற்றை சுயசரிதைகளின் ஊடாக படிக்கும் போது தான் சுவாரசியமாக இருக்கும் அங்கே வரலாறு இரத்தமும் - சதையுமாக இயல்பாக வரும். வரலாற்றை புத்தகத்துக்குள்ளால் படிக்கும் போது அது உலர்ந்து போய் இருக்கும். மாறாக அதனை சுயசரிதைக்குள்ளால் படிக்கும் போது அதில் ஓர் உயிர்த்தன்மை இருக்கும்.
அரசியலில் தூய பொருளாதாரம் என்று ஒன்று கிடையாது. அரசியல் பொருளாதாரம் தான் உண்டு. பொருளாதாரம் என்பது பாடப் புத்தகங்களில் தான் தனிப் பொருளாதாரம். ஆனால் நடைமுறையில் அரசியல் பொருளாதாரம் தான் உண்டு. அந்த அடிப்படையில் பார்த்தால் ராஜ் ராஜரட்ணத்தின் கைதுக்கு பின்னாலும் அரசியல் உண்டு. சொல்லப்பட்ட காரணங்களுக்கு பின்னாலும் அரசியல் உண்டு. விடுதலைக்கு பின்னுக்கும் அரசியல் இருக்கலாம். எல்லாவற்றுக்கு பின்னுக்கும் அரசியல் இருக்கும். எல்லாவற்றுக்கு பின்னுக்கும் ஏதோ ஒரு அசைவியக்கம் இருக்கும்.
சமனற்ற நீதி நூலானது உலகப் பேரரசு ஒன்றின் நீதி பரிபாலன கட்டமைப்பு மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல். தன்னை கைது செய்த புலனாய்வு அதிகாரிகள் தொடக்கம் விசாரணை செய்த நீதிபதி உட்பட அனைவர் மீதும் கடுமையான கூர்மையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐ.நாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், சிறீலங்கா அரசுக்கு எதிராகவும் தீர்மானங்களை கொண்டு வருகின்ற அந்த மேற்கத்தேய நீதிபரிபாலன கட்டமைப்புக்கு தான் இவ்வளவு அடியும் இந்த நூலில் விழுந்திருக்கிறது. இதை எப்படி ஈழத்தமிழர்கள் விளங்கிக் கொள்வது?
இங்கிருந்து தான் தொடங்குகின்றது அரசுகளின் நீதி என்றால் என்ன? என்ற கேள்வி. அரசுகளின் நீதி அறநெறிகளின்பாற்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க அரசியல் பொருளாதார இராணுவ நலன்களின் அடிப்படையில் தான் இருக்கும். உலகப் பேரரசு ஆகிய அமெரிக்கா ஒரு தனிமனிதனாகிய ராஜ் ராஜரட்ணத்துக்கு வழங்கிய நீதி தான், அது ஏனைய நாடுகளுக்கும் வழங்கும் நீதியும். ஒரு பெரிய உதாரணம் ஒன்றை விவரிப்பேன். ஈராக்கில் மனிதகுலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஆக்கிரமித்தார்கள். ஆக்கிரமித்து முடிந்த பின்னர் அதில் சம்பந்தப்பட்டுள்ள துறைசார் வல்லுநர்களே சொன்னார்கள் அப்படி ஒன்றும் இல்லை என்று. எங்கே போய் நீதி கேட்பது?
அவர்கள் ஈராக்கைச் சிதைத்து விட்டார்கள். ஒரு பழம்பெரிய நாகரிகத்தைச் சிதைத்தே விட்டார்கள். பொய்யான காரணங்களை கூறினார்கள். அங்கே மனிதகுலத்துக்கு தீங்கான ஒரு ஆயுதத்தை கண்டுபிடித்தார்களா? இல்லை, அழித்து விட்டார்கள் ஈராக்கை. இன்றைக்கு வரைக்கும் அங்கு இந்த நிலைமை இருக்கிறது. பொய்யை சொல்லித் தான் யுத்தத்தை தொடங்கினார்கள். இப்படி ஒரு நாட்டை தோற்கடிப்பதற்கு பொய் சொல்லும் பேரரசு, ஒரு சாதாரண சிறிய மனிதனை பிடிப்பதற்கு எப்படிப்பட்ட பொய்களைச் சொல்லும்? சிந்தித்துப் பாருங்கள்.
பலஸ்தீனத்தில் இப்பொழுது இனப்படுகொலை நடப்பதாக சொல்கிறோம். இனப்படுகொலைக்கு எதிராக தென்னாபிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது. ஆனால் 2009இல் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது பலஸ்தீனம் எந்தவிதத்திலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. 2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை அழைத்து அவருக்கு பலஸ்தீனத்தின் அதியுயர் விருதாகிய பலஸ்தீன நட்சத்திரம் எனும் விருதை வழங்கினார்கள். அங்கே உள்ள ஒரு வீதிக்கு அவருடைய பெயரையும் வைத்தார்கள். இந்த தர்மத்தை எப்படி வியாக்கியானம் செய்வது?
கியூபா ஆரம்ப காலம் தொட்டு போராடும் இயக்கங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. ஆனால் ஐ.நாவில் இன்றைக்கு வரைக்கும் கியூபா சிறீலங்கா அரசாங்கத்தின் பக்கம் தான் நிற்கின்றது. அரசியலில் அறம் உண்டா? நீதி உண்டா? இல்லை இல்லவே இல்லை. அரசியலில் நிலையான நலன்கள் தான் உண்டு. தென்னாபிரிக்காவுக்கும் அதுதான். பலஸ்தீனத்துக்கும் அது தான். அமெரிக்காவுக்கும் அதுதான். இந்த அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீதியின்பாற்பட்டு கிடையாது. இது அரசுக்கும் - அரசுக்கும் இடையிலான உறவுக்கு இடையிலும் வரும். அரசுக்கும் - தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுக்குள்ளேயும் வரும். ராஜ் ராஜரட்ணத்துக்கும் அது தான் நடந்தது.
அப்பொழுது அமெரிக்கா ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தது. அதற்கு பலி ஆடுகள் தேவைப்பட்டன. சிலரை அவர்கள் பலி ஆடுகள் ஆக்க முற்பட்டார்கள். ஒரு அரசு தனது தவறை மறைப்பதற்கு தனி நபர்களை பலி ஆடுகளாக தேடியது. இதைத் தான் உலகில் எல்லா பேரரசுகளும் செய்கின்றன. பேரரசுகள் மட்டுமல்ல, ஸ்தாபிக்கப்பட்ட மதங்களும் காலத்துக்கு காலம் தங்கள் எதிரிகளுக்கு எதிராக இதைத்தான் செய்து வந்திருக்கின்றன. இது தான் வரலாறு. இந்த சமனற்ற நீதி நூலில் எங்களுக்கு கிடைக்கும் செய்தியும் அது தான். என்று தெரிவித்தார்.
அரசியலில் நீதி என்பது கிடையாது. நிலையான நலன்கள் மட்டும் தான் உண்டு - நிலாந்தன் தெரிவிப்பு.samugammedia ஒரு அரசு தனது தவறை மறைப்பதற்கு தனி நபர்களை பலி ஆடுகளாக தேடியது. இதைத் தான் உலகில் எல்லா பேரரசுகளும் செய்கின்றன. பேரரசுகள் மட்டுமல்ல, ஸ்தாபிக்கப்பட்ட மதங்களும் காலத்துக்கு காலம் தங்கள் எதிரிகளுக்கு எதிராக இதைத்தான் செய்து வந்திருக்கின்றன என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார் ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் அமெரிக்க தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் அவர்கள் தனது சுயசரிதை பற்றி ஆங்கில மொழியில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'சமனற்ற நீதி" நூல் வெளியீடு நேற்று முன்தினம் (20) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் சிறப்புரையாற்றிய போதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் .அரசியலில் அறம் உண்டா நீதி உண்டா இல்லை, இல்லவே இல்லை. அரசியலில் நிலையான நலன்கள் மட்டும் தான் உண்டு. தென்னாபிரிக்காவுக்கும் அதுதான். பலஸ்தீனத்துக்கும் அது தான். அமெரிக்காவுக்கும் அதுதான். இந்த அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீதியின்பாற்பட்டு கிடையாது. இது அரசுக்கும் - அரசுக்கும் இடையிலான உறவுக்கு இடையிலும் வரும். அரசுக்கும் - தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுக்குள்ளேயும் வரும். ராஜ் ராஜரட்ணத்துக்கும் அது தான் நடந்தது. அமெரிக்காவுக்கு பலி ஆடுகள் தேவைப்பட்டன. ஒரு அரசு தனது தவறை மறைப்பதற்கு தனி நபர்களை பலி ஆடுகளாக்க தேடியது. வரலாற்றை சுயசரிதைகளின் ஊடாக படிக்கும் போது தான் சுவாரசியமாக இருக்கும் அங்கே வரலாறு இரத்தமும் - சதையுமாக இயல்பாக வரும். வரலாற்றை புத்தகத்துக்குள்ளால் படிக்கும் போது அது உலர்ந்து போய் இருக்கும். மாறாக அதனை சுயசரிதைக்குள்ளால் படிக்கும் போது அதில் ஓர் உயிர்த்தன்மை இருக்கும். அரசியலில் தூய பொருளாதாரம் என்று ஒன்று கிடையாது. அரசியல் பொருளாதாரம் தான் உண்டு. பொருளாதாரம் என்பது பாடப் புத்தகங்களில் தான் தனிப் பொருளாதாரம். ஆனால் நடைமுறையில் அரசியல் பொருளாதாரம் தான் உண்டு. அந்த அடிப்படையில் பார்த்தால் ராஜ் ராஜரட்ணத்தின் கைதுக்கு பின்னாலும் அரசியல் உண்டு. சொல்லப்பட்ட காரணங்களுக்கு பின்னாலும் அரசியல் உண்டு. விடுதலைக்கு பின்னுக்கும் அரசியல் இருக்கலாம். எல்லாவற்றுக்கு பின்னுக்கும் அரசியல் இருக்கும். எல்லாவற்றுக்கு பின்னுக்கும் ஏதோ ஒரு அசைவியக்கம் இருக்கும். சமனற்ற நீதி நூலானது உலகப் பேரரசு ஒன்றின் நீதி பரிபாலன கட்டமைப்பு மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல். தன்னை கைது செய்த புலனாய்வு அதிகாரிகள் தொடக்கம் விசாரணை செய்த நீதிபதி உட்பட அனைவர் மீதும் கடுமையான கூர்மையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐ.நாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், சிறீலங்கா அரசுக்கு எதிராகவும் தீர்மானங்களை கொண்டு வருகின்ற அந்த மேற்கத்தேய நீதிபரிபாலன கட்டமைப்புக்கு தான் இவ்வளவு அடியும் இந்த நூலில் விழுந்திருக்கிறது. இதை எப்படி ஈழத்தமிழர்கள் விளங்கிக் கொள்வதுஇங்கிருந்து தான் தொடங்குகின்றது அரசுகளின் நீதி என்றால் என்ன என்ற கேள்வி. அரசுகளின் நீதி அறநெறிகளின்பாற்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க அரசியல் பொருளாதார இராணுவ நலன்களின் அடிப்படையில் தான் இருக்கும். உலகப் பேரரசு ஆகிய அமெரிக்கா ஒரு தனிமனிதனாகிய ராஜ் ராஜரட்ணத்துக்கு வழங்கிய நீதி தான், அது ஏனைய நாடுகளுக்கும் வழங்கும் நீதியும். ஒரு பெரிய உதாரணம் ஒன்றை விவரிப்பேன். ஈராக்கில் மனிதகுலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஆக்கிரமித்தார்கள். ஆக்கிரமித்து முடிந்த பின்னர் அதில் சம்பந்தப்பட்டுள்ள துறைசார் வல்லுநர்களே சொன்னார்கள் அப்படி ஒன்றும் இல்லை என்று. எங்கே போய் நீதி கேட்பது அவர்கள் ஈராக்கைச் சிதைத்து விட்டார்கள். ஒரு பழம்பெரிய நாகரிகத்தைச் சிதைத்தே விட்டார்கள். பொய்யான காரணங்களை கூறினார்கள். அங்கே மனிதகுலத்துக்கு தீங்கான ஒரு ஆயுதத்தை கண்டுபிடித்தார்களா இல்லை, அழித்து விட்டார்கள் ஈராக்கை. இன்றைக்கு வரைக்கும் அங்கு இந்த நிலைமை இருக்கிறது. பொய்யை சொல்லித் தான் யுத்தத்தை தொடங்கினார்கள். இப்படி ஒரு நாட்டை தோற்கடிப்பதற்கு பொய் சொல்லும் பேரரசு, ஒரு சாதாரண சிறிய மனிதனை பிடிப்பதற்கு எப்படிப்பட்ட பொய்களைச் சொல்லும் சிந்தித்துப் பாருங்கள். பலஸ்தீனத்தில் இப்பொழுது இனப்படுகொலை நடப்பதாக சொல்கிறோம். இனப்படுகொலைக்கு எதிராக தென்னாபிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது. ஆனால் 2009இல் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது பலஸ்தீனம் எந்தவிதத்திலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. 2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை அழைத்து அவருக்கு பலஸ்தீனத்தின் அதியுயர் விருதாகிய பலஸ்தீன நட்சத்திரம் எனும் விருதை வழங்கினார்கள். அங்கே உள்ள ஒரு வீதிக்கு அவருடைய பெயரையும் வைத்தார்கள். இந்த தர்மத்தை எப்படி வியாக்கியானம் செய்வது கியூபா ஆரம்ப காலம் தொட்டு போராடும் இயக்கங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. ஆனால் ஐ.நாவில் இன்றைக்கு வரைக்கும் கியூபா சிறீலங்கா அரசாங்கத்தின் பக்கம் தான் நிற்கின்றது. அரசியலில் அறம் உண்டா நீதி உண்டா இல்லை இல்லவே இல்லை. அரசியலில் நிலையான நலன்கள் தான் உண்டு. தென்னாபிரிக்காவுக்கும் அதுதான். பலஸ்தீனத்துக்கும் அது தான். அமெரிக்காவுக்கும் அதுதான். இந்த அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீதியின்பாற்பட்டு கிடையாது. இது அரசுக்கும் - அரசுக்கும் இடையிலான உறவுக்கு இடையிலும் வரும். அரசுக்கும் - தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுக்குள்ளேயும் வரும். ராஜ் ராஜரட்ணத்துக்கும் அது தான் நடந்தது. அப்பொழுது அமெரிக்கா ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தது. அதற்கு பலி ஆடுகள் தேவைப்பட்டன. சிலரை அவர்கள் பலி ஆடுகள் ஆக்க முற்பட்டார்கள். ஒரு அரசு தனது தவறை மறைப்பதற்கு தனி நபர்களை பலி ஆடுகளாக தேடியது. இதைத் தான் உலகில் எல்லா பேரரசுகளும் செய்கின்றன. பேரரசுகள் மட்டுமல்ல, ஸ்தாபிக்கப்பட்ட மதங்களும் காலத்துக்கு காலம் தங்கள் எதிரிகளுக்கு எதிராக இதைத்தான் செய்து வந்திருக்கின்றன. இது தான் வரலாறு. இந்த சமனற்ற நீதி நூலில் எங்களுக்கு கிடைக்கும் செய்தியும் அது தான். என்று தெரிவித்தார்.