• Aug 02 2025

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மதன்பாபு காலமானார்; சோகத்தில் ரசிகர்கள்

Chithra / Aug 2nd 2025, 8:37 pm
image

 

தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், மலையாளம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மதன்பாபுவின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மதன்பாபு காலமானார்; சோகத்தில் ரசிகர்கள்  தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், மலையாளம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதன்பாபுவின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement