• Nov 26 2024

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு - பாத யாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள்!

Chithra / Jun 30th 2024, 11:44 am
image


  

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு, கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது.

விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று காலை 6 மணியளவில் இந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து ஆரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை ஆரம்பித்தனர்.

பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்து கொண்டார்.

மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 11 ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு - பாத யாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள்   வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு, கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது.விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று காலை 6 மணியளவில் இந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.இதையடுத்து ஆரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை ஆரம்பித்தனர்.பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்து கொண்டார்.மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 11 ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement