• Apr 01 2025

வெள்ளத்தில் மிதக்கும் தருமபுரம் பொதுச் சந்தை...! தொடரும் அவலம்....! samugammedia

Sharmi / Dec 1st 2023, 3:29 pm
image

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது.

இதனால் சந்தையில்  வியாபார நடவடிகையை  மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கட்டிடத்தின் கூரையிலிருந்து மழைநீர் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி  வியாபாரத்தினை வாழ்வாதாரமாக கொண்டு  செல்லும்  வியாபாரிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதகவும் குறிப்பிடுகின்றனர்.  

சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெள்ள நீர் காரணமாக வருவதில்லை என குறிப்பிடும் வர்த்தகர்கள், வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தைப் பகுதியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துதரும்படி வியாபாரிகள் கோருகின்றனர்.




வெள்ளத்தில் மிதக்கும் தருமபுரம் பொதுச் சந்தை. தொடரும் அவலம். samugammedia தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது.இதனால் சந்தையில்  வியாபார நடவடிகையை  மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கட்டிடத்தின் கூரையிலிருந்து மழைநீர் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மரக்கறி  வியாபாரத்தினை வாழ்வாதாரமாக கொண்டு  செல்லும்  வியாபாரிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதகவும் குறிப்பிடுகின்றனர்.  சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெள்ள நீர் காரணமாக வருவதில்லை என குறிப்பிடும் வர்த்தகர்கள், வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.குறித்த சந்தைப் பகுதியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துதரும்படி வியாபாரிகள் கோருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now