• Sep 20 2024

தினேஷ் சாப்டரின் கொலை விவகாரம் : அவிழ்க்கப்படும் மர்மமுடிச்சுகள்!

Tamil nila / Dec 29th 2022, 8:12 pm
image

Advertisement

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், விசாரணைகளை முன்னெடுக்கும் 8 சிறப்புக் குழுவின் விசாரணையாளர்களையும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன  கலந்துரையாடலொன்றுக்கு அழைத்துள்ளார்.


சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  


இதன் போது,  விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில், ஆரயப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில், இதுவரை 84 பேரின் வாக்கு மூலங்களை  விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.


ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும்,  அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் , கடந்த 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில் அதனை மையப்படுத்தி குறித்த விசாரணைகள் மிக நீண்ட நேரம் நடாத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. சிஐடி வசம் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாப்டர்  மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக  சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எனினும் அப்பிரேத பரிசோதனை அறிக்கையின் விரிவான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஷாப்டரின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்களை  சி.ஐ.டி.யினரால் அவிழ்க்க முடியவில்லை.


தினேஷ் சாப்டரின் கொலை விவகாரம் : அவிழ்க்கப்படும் மர்மமுடிச்சுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், விசாரணைகளை முன்னெடுக்கும் 8 சிறப்புக் குழுவின் விசாரணையாளர்களையும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன  கலந்துரையாடலொன்றுக்கு அழைத்துள்ளார்.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  இதன் போது,  விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில், ஆரயப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில், இதுவரை 84 பேரின் வாக்கு மூலங்களை  விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும்,  அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் , கடந்த 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில் அதனை மையப்படுத்தி குறித்த விசாரணைகள் மிக நீண்ட நேரம் நடாத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. சிஐடி வசம் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாப்டர்  மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக  சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் அப்பிரேத பரிசோதனை அறிக்கையின் விரிவான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஷாப்டரின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்களை  சி.ஐ.டி.யினரால் அவிழ்க்க முடியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement