• Oct 09 2024

யாழில் பாடசாலை மாணவிக்கு எமனாக மாறிய டிப்பர்..!

Sharmi / Sep 10th 2024, 10:47 pm
image

Advertisement

யாழில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் குறித்த மாணவி மீது மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் பின்புற சில்லானது மாணவியின் மீது ஏறியது.

இந்நிலையில் படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு அவர் உயிரிழந்தார். 

மாணவியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


யாழில் பாடசாலை மாணவிக்கு எமனாக மாறிய டிப்பர். யாழில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் குறித்த மாணவி மீது மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டது.இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் பின்புற சில்லானது மாணவியின் மீது ஏறியது.இந்நிலையில் படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு அவர் உயிரிழந்தார். மாணவியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement