இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.
2025 பட்ஜெட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன் முதல் கலந்துரையாடல், இலங்கை பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதாக அமைந்தது.
அத்துடன், இலங்கை பொலிஸாரால் கொள்வனவு செய்யப்படவுள்ள சுமார் 200 புதிய வாகனங்களுக்கான கொள்வனவு செயல்முறையை விரைவுபடுத்தவும்,
இலங்கை பொலிஸாருக்கு சொந்தமான தற்போது கட்டுமானத்தில் உள்ள கட்டடங்களை விரைவில் முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல் இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.2025 பட்ஜெட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இதன் முதல் கலந்துரையாடல், இலங்கை பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதாக அமைந்தது.அத்துடன், இலங்கை பொலிஸாரால் கொள்வனவு செய்யப்படவுள்ள சுமார் 200 புதிய வாகனங்களுக்கான கொள்வனவு செயல்முறையை விரைவுபடுத்தவும், இலங்கை பொலிஸாருக்கு சொந்தமான தற்போது கட்டுமானத்தில் உள்ள கட்டடங்களை விரைவில் முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.