• Aug 17 2026

இந்தோனேஷியாவில் பேரழிவு; 51 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம் - நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டம்

Chithra / Aug 16th 2026, 4:17 pm
image


இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.


புளோரஸ் (Flores) தீவுப் பகுதியில் நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது.


நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததால், அதன் தாக்கம் மிகவும் கடுமையாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. எனினும், கடலோரப் பகுதிகளில் 1.5 மீற்றருக்கும் அதிக உயரத்தில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த அனர்த்தத்தால் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


மேலும், நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கிராமங்கள் வெளிப்புறத் தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


இதேவேளை, இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவில் நேற்று பிற்பகல் 6.9 ரிக்டர் அளவிலான மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

 

இந்தோனேஷியாவில் பேரழிவு; 51 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம் - நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டம் இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.புளோரஸ் (Flores) தீவுப் பகுதியில் நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததால், அதன் தாக்கம் மிகவும் கடுமையாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. எனினும், கடலோரப் பகுதிகளில் 1.5 மீற்றருக்கும் அதிக உயரத்தில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அனர்த்தத்தால் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கிராமங்கள் வெளிப்புறத் தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவில் நேற்று பிற்பகல் 6.9 ரிக்டர் அளவிலான மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement