• May 10 2025

ரணில் பக்கம் சாய்ந்த அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Chithra / Aug 18th 2024, 9:43 am
image

 

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரினால்  இது தொடர்பான கடிதம் அலி சாஹிர் மௌலானாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் குழுக் கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், கட்சியின் தீர்மானத்துக்கு, எதிராக செயற்பட்டமையினால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ரணில் பக்கம் சாய்ந்த அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரினால்  இது தொடர்பான கடிதம் அலி சாஹிர் மௌலானாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் குழுக் கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அறிவித்திருந்தார்.இந்தநிலையில், கட்சியின் தீர்மானத்துக்கு, எதிராக செயற்பட்டமையினால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now