• Sep 19 2024

தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு!

Tamil nila / Feb 9th 2023, 8:15 pm
image

Advertisement

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் முரண்பாடான சூழல் நிலவுவதாக வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே ஜனாதிபதியின் சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக ஷாப்டர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.


ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.


உணவுடன் சயனைட் உட்செலுத்தப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்தவரின் சடலத்தின் குணாதிசயங்களை ஆராயும் போது அது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவது சிக்கலாக உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான முரண்பாடான அறிக்கைகளின் அடிப்படையில் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் முடிவெடுப்பது கடினம் எனவும், இது தொடர்பில் மேலும் பரிசீலிக்குமாறும் நீதிமன்றில் ஜனாதிபதியின் சட்டத்தரணி கோரினார்.


குறித்த வைத்தியரை 08 மாதங்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதிப்பதற்கு இலங்கை மருத்துவ சபை கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி தீர்மானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்.


முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.


இறுதி விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் உத்தரவை அறிவிப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் முரண்பாடான சூழல் நிலவுவதாக வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே ஜனாதிபதியின் சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக ஷாப்டர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.உணவுடன் சயனைட் உட்செலுத்தப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்தவரின் சடலத்தின் குணாதிசயங்களை ஆராயும் போது அது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவது சிக்கலாக உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான முரண்பாடான அறிக்கைகளின் அடிப்படையில் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் முடிவெடுப்பது கடினம் எனவும், இது தொடர்பில் மேலும் பரிசீலிக்குமாறும் நீதிமன்றில் ஜனாதிபதியின் சட்டத்தரணி கோரினார்.குறித்த வைத்தியரை 08 மாதங்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதிப்பதற்கு இலங்கை மருத்துவ சபை கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி தீர்மானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்.முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.இறுதி விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் உத்தரவை அறிவிப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement