• Feb 06 2026

யாழ் மாநகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

dileesiya / Feb 6th 2026, 2:53 pm
image

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் விளக்கக் காட்சியினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அண்மையில் மாநகர மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.


இதன் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பதவிநிலை அதிகாரிகளினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாநகரம் தொடர்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விளக்க காட்சிகள் தெளிவுபடுத்தப்பட்டன.


முன்வைக்கப்பட்ட கருத்தாடல்கள் தொடர்பில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.


உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தனர்.


கலந்துரையாடலில்  முன்வைக்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்களுக்கு மாநகரசபையின் அடுத்த மாதாந்த பொதுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதும், அவை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்படி கலந்துரையாடலில் மாநகரசபையின் பிரதி முதல்வர், உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.


யாழ் மாநகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் விளக்கக் காட்சியினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அண்மையில் மாநகர மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.இதன் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பதவிநிலை அதிகாரிகளினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாநகரம் தொடர்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விளக்க காட்சிகள் தெளிவுபடுத்தப்பட்டன.முன்வைக்கப்பட்ட கருத்தாடல்கள் தொடர்பில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தனர்.கலந்துரையாடலில்  முன்வைக்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்களுக்கு மாநகரசபையின் அடுத்த மாதாந்த பொதுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதும், அவை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி கலந்துரையாடலில் மாநகரசபையின் பிரதி முதல்வர், உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement