• Feb 15 2025

முல்லையில் வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்..!

Sharmi / Feb 14th 2025, 5:43 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், ஆரம்ப உரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக முதல் காலாண்டு நிதியாக ரூபா 23 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறையில் சமர்ப்பிப்பதற்க்கான முன்னாயத்த கலந்துரையாடலாக இது அமையும் எனவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன் , பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் , உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.



முல்லையில் வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், ஆரம்ப உரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக முதல் காலாண்டு நிதியாக ரூபா 23 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறையில் சமர்ப்பிப்பதற்க்கான முன்னாயத்த கலந்துரையாடலாக இது அமையும் எனவும் தெரிவித்தார்.இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன் , பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் , உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement