• Nov 23 2024

தம்பலகாமத்தில் சிவில் அமைப்புக்களுடனான உண்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்..!

Sharmi / Sep 12th 2024, 3:59 pm
image

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் சிவில் அமைப்புக்களுடனான உண்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது.

அகம் மனிதாபிமான வளநிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களுடனான உண்மை தன்மை வெளிப்படை தன்மை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

குறித்த கலந்துரையாடலானது 45 நாட்களுக்கு ஒரு முறை இடம் பெற்று வருகிறது .தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியான 9ம் கொலணியில் வீதி மின் விளக்கு இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இதில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளர் பிரதேச சபை செயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிராஜ் நகர் வாசிக சாலையில் நூல்கள் குறைவாக காணப்படுவதனாலும் அதனை நிவர்த்திக்குமாறும் குறித்த பகுதியில் வாசிப்பு திறனை மேம்படுத்த உள்ளூராட்சி மன்றம் பங்களிப்புச் செய்யவும் யமுனுபுர சந்தை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமை சூழல் மாசடைதல் தொடர்பில் இளைஞர் யுவதி ஒருவர் பிரதேச சபை செயலாளரிடம் எடுத்துரைத்தார். மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் வீதி மின் விளக்கின்மை உள்ளிட்ட பல காரணங்களால் பல துன்பங்களை எதிர்நோக்குவதாகவும் இதன் போது சிவில் சமூக செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து வெளிப்படைத் தன்மையுடன் இயங்கக் கூடிய குழு மூலமாக இதன் போது ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

குறித்த நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், அகம் நிலைய திட்ட இணைப்பாளர், உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலர் கலந்து கொண்டனர்.




தம்பலகாமத்தில் சிவில் அமைப்புக்களுடனான உண்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் சிவில் அமைப்புக்களுடனான உண்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது.அகம் மனிதாபிமான வளநிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களுடனான உண்மை தன்மை வெளிப்படை தன்மை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. குறித்த கலந்துரையாடலானது 45 நாட்களுக்கு ஒரு முறை இடம் பெற்று வருகிறது .தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியான 9ம் கொலணியில் வீதி மின் விளக்கு இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இதில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளர் பிரதேச சபை செயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.மேலும் சிராஜ் நகர் வாசிக சாலையில் நூல்கள் குறைவாக காணப்படுவதனாலும் அதனை நிவர்த்திக்குமாறும் குறித்த பகுதியில் வாசிப்பு திறனை மேம்படுத்த உள்ளூராட்சி மன்றம் பங்களிப்புச் செய்யவும் யமுனுபுர சந்தை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமை சூழல் மாசடைதல் தொடர்பில் இளைஞர் யுவதி ஒருவர் பிரதேச சபை செயலாளரிடம் எடுத்துரைத்தார். மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் வீதி மின் விளக்கின்மை உள்ளிட்ட பல காரணங்களால் பல துன்பங்களை எதிர்நோக்குவதாகவும் இதன் போது சிவில் சமூக செயற்பாட்டாளர் தெரிவித்தார்.ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து வெளிப்படைத் தன்மையுடன் இயங்கக் கூடிய குழு மூலமாக இதன் போது ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .குறித்த நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், அகம் நிலைய திட்ட இணைப்பாளர், உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement