• Sep 20 2024

உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / May 18th 2023, 6:38 pm
image

Advertisement

இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பாடநெறிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படும் போது அவை பல்வேறு சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதனை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் வழங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) மற்றும் அத்துடன் இணைந்த உயர் தொழிநுட்ப நிறுவனம் (ATI) என்பவற்றின் மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதே போன்று, உயர் தர பெறுபேறுகள் கிடைத்தல் மற்றும் பல்கலைக்கழக நுழைவு என்பவற்றுக்கிடையிலான காலத்தை மாணவர்கள் பயனுள்ளதாகப் பயன்படுத்தத் தேவையான பொறிமுறையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என குழுவின் கருத்தாக இருந்தது. மேலும், உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பட்டங்கள் வழங்கும் பல்வேறு நிறுவங்களை ஒழுங்குபடுத்தும் தேவை தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் samugammedia இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பாடநெறிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படும் போது அவை பல்வேறு சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதனை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் வழங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.மேலும், இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) மற்றும் அத்துடன் இணைந்த உயர் தொழிநுட்ப நிறுவனம் (ATI) என்பவற்றின் மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.அதே போன்று, உயர் தர பெறுபேறுகள் கிடைத்தல் மற்றும் பல்கலைக்கழக நுழைவு என்பவற்றுக்கிடையிலான காலத்தை மாணவர்கள் பயனுள்ளதாகப் பயன்படுத்தத் தேவையான பொறிமுறையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என குழுவின் கருத்தாக இருந்தது. மேலும், உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பட்டங்கள் வழங்கும் பல்வேறு நிறுவங்களை ஒழுங்குபடுத்தும் தேவை தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement