• Feb 19 2025

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் - காவல்துறையினர் அதிரடி

Tharun / May 20th 2024, 6:14 pm
image

அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் சிக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அத்தோடு, சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்  நடவடிக்கைகயில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் - காவல்துறையினர் அதிரடி அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் சிக்கியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.அத்தோடு, சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், குறித்த சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்  நடவடிக்கைகயில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.மேலும், சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement