சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை இடரினால் பாதிக்கப்பட்டு பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியால நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த குடுமபங்களுக்கு.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் சமூக செயற்றிட்டத்தின் கீழ் நேற்று (30) சனிக்கிழமை உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கொட்டடி, தெனியம்மன் கோயிலடி, சந்தை மேற்கு ஒழுங்கை ஆகிய இடங்களில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் கரையோரங்களில் அபாய வலயத்தில் வசிக்கும் 29 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது வெள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் குறித்த நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் நேற்று (30) வீடுகளுக்கு திரும்ப செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த 29 குடும்பங்களுக்கு யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தினரால் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பிரிவு கிராம உத்தியோகத்தர் அரவிந்தகுமாரின் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தலா ஆயிரத்து நூறு ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் 29 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி ஊடக இல்லத்தினரால் உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை இடரினால் பாதிக்கப்பட்டு பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியால நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த குடுமபங்களுக்கு.யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் சமூக செயற்றிட்டத்தின் கீழ் நேற்று (30) சனிக்கிழமை உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கொட்டடி, தெனியம்மன் கோயிலடி, சந்தை மேற்கு ஒழுங்கை ஆகிய இடங்களில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் கரையோரங்களில் அபாய வலயத்தில் வசிக்கும் 29 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.தற்போது வெள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் குறித்த நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் நேற்று (30) வீடுகளுக்கு திரும்ப செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து குறித்த 29 குடும்பங்களுக்கு யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தினரால் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பிரிவு கிராம உத்தியோகத்தர் அரவிந்தகுமாரின் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது தலா ஆயிரத்து நூறு ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் 29 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.