கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான அவசர உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்காளிப்பில் இவை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
13 வயது தொடக்கம் 19 வயத்திற்குட்பட்ட பெண்களுக்கும், 20வயது தொடக்கம் 45 வயத்திற்குட்பட்ட பெண்களுக்குமென இரு பிரிவுகளாக பெண்களுக்கான விசேட பொதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை தர்மபுரத்தில் 30 , கண்டாவளையில் 50 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து நேற்றுமுன்தினம் (03) இரத்தினபுரத்தத்தில் 50பேருக்கும், ஸ்கந்தபுரத்தில் 30பேருக்கும், பல்லவராயன்கட்டில் 35பேருக்கும், நச்சிக்குடாவில் 30பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் நேற்று (04) பளையில் 37பேருக்கும், தம்பகாமத்தில் 30 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்(UNFPA) மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து இதனை நடைமுறைப்படுத்திகின்றன.
UNFPA கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறைகளுக்கு ஆளான பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயற்றிட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்(UNFPA) வடக்கு மாகாண இணைப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக உளவளதுணையாளர், கிராம சேவகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் பெண்களுக்கான அவசர உதவிப் பொருட்கள் வழங்கல் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான அவசர உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்காளிப்பில் இவை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.13 வயது தொடக்கம் 19 வயத்திற்குட்பட்ட பெண்களுக்கும், 20வயது தொடக்கம் 45 வயத்திற்குட்பட்ட பெண்களுக்குமென இரு பிரிவுகளாக பெண்களுக்கான விசேட பொதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.அதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை தர்மபுரத்தில் 30 , கண்டாவளையில் 50 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் (03) இரத்தினபுரத்தத்தில் 50பேருக்கும், ஸ்கந்தபுரத்தில் 30பேருக்கும், பல்லவராயன்கட்டில் 35பேருக்கும், நச்சிக்குடாவில் 30பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் நேற்று (04) பளையில் 37பேருக்கும், தம்பகாமத்தில் 30 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்(UNFPA) மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து இதனை நடைமுறைப்படுத்திகின்றன.UNFPA கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறைகளுக்கு ஆளான பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயற்றிட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்(UNFPA) வடக்கு மாகாண இணைப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக உளவளதுணையாளர், கிராம சேவகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.