• Apr 02 2025

விடுமுறையை கழிக்க ஹந்தான மலைக்கு சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி

Chithra / Dec 5th 2024, 11:18 am
image


கண்டி - ஹந்தான மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற  பாடசாலை மாணவர்கள் குழுவொன்று  அங்கு சிக்கிக்கொண்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

16 தொடக்கம் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் மாணவர்கள் குழு சிக்கிகொண்டதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தெரிவித்ததையடுத்து, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலை விடுமுறை காரணமாக கொழும்பு மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, விடுமுறையை கழிப்பதற்காக ஹந்தான மலை பகுதிக்கு நேற்று  மாலை 6.00 மணியளவில் சென்றுள்ளனர். 

மாணவர்கள், பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரசவிகம பிரதேசத்தில் இருந்து, ஹந்தான மலைக்கு ஏறத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, குளிரால் சில மாணவர்களுக்கு காலில் தசைப்பிடுப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களால் நடக்கமுடியாமல் சென்றுள்ளது. 

மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக பாதையை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் மற்றும் இரண்டாம் சிங்கப் படையினர் இணைந்து இன்று காலை சரசவிகம பிரதேசத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

விடுமுறையை கழிக்க ஹந்தான மலைக்கு சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி கண்டி - ஹந்தான மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற  பாடசாலை மாணவர்கள் குழுவொன்று  அங்கு சிக்கிக்கொண்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.16 தொடக்கம் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் மாணவர்கள் குழு சிக்கிகொண்டதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தெரிவித்ததையடுத்து, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பாடசாலை விடுமுறை காரணமாக கொழும்பு மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, விடுமுறையை கழிப்பதற்காக ஹந்தான மலை பகுதிக்கு நேற்று  மாலை 6.00 மணியளவில் சென்றுள்ளனர். மாணவர்கள், பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரசவிகம பிரதேசத்தில் இருந்து, ஹந்தான மலைக்கு ஏறத் தொடங்கியுள்ளனர்.இதையடுத்து, குளிரால் சில மாணவர்களுக்கு காலில் தசைப்பிடுப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களால் நடக்கமுடியாமல் சென்றுள்ளது. மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக பாதையை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் மற்றும் இரண்டாம் சிங்கப் படையினர் இணைந்து இன்று காலை சரசவிகம பிரதேசத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement