• Nov 26 2024

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமங்கள் விநியோகம்...! எமது ஆட்சியில் இரத்து செய்வோம்...! சபையில் சஜித் திட்டவட்டம்...!

Sharmi / May 8th 2024, 9:17 am
image

தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிமங்களை வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் (04) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் மதுபான உரிமங்களை வழங்கும் நடைமுறை கட்டாயம் நிறுத்தப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். 

இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம்.

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகத்தின், வெலங்கஹவல சந்தியில் மதுபான அனுமதிப் பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இது குறித்து மீண்டும் கேள்வி எழுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறேன். 

மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மீண்டும் இது மீள திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமங்கள் விநியோகம். எமது ஆட்சியில் இரத்து செய்வோம். சபையில் சஜித் திட்டவட்டம். தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிமங்களை வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்நேற்றையதினம் (04) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் மதுபான உரிமங்களை வழங்கும் நடைமுறை கட்டாயம் நிறுத்தப்படும்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம்.இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகத்தின், வெலங்கஹவல சந்தியில் மதுபான அனுமதிப் பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.இது குறித்து மீண்டும் கேள்வி எழுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறேன். மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மீண்டும் இது மீள திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement