• Jan 06 2025

யாழில் இடம்பெற்ற மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம்..!

Sharmi / Dec 11th 2024, 3:42 pm
image

மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(11) மாலை 2 மணியளவில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற  இக் கூட்டத்தில்,  இளவயது கர்ப்பம் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டது.

அந்தவகையில், வேலணை மற்றும் நல்லூர் பகுதிகளை உள்ளடக்கியதாக 6 இளவயது கர்ப்பம் தரித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றுள் ஒன்று துஸ்பிரயோக சம்பவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை,  பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களின் புள்ளி விபரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக் கூட்டத்தில் மாவட்ட செயலக துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலய கல்வி அலுவலர்கள்,  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 




யாழில் இடம்பெற்ற மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம். மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(11) மாலை 2 மணியளவில் இடம்பெற்றது.யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற  இக் கூட்டத்தில்,  இளவயது கர்ப்பம் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டது.அந்தவகையில், வேலணை மற்றும் நல்லூர் பகுதிகளை உள்ளடக்கியதாக 6 இளவயது கர்ப்பம் தரித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றுள் ஒன்று துஸ்பிரயோக சம்பவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை,  பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களின் புள்ளி விபரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.இக் கூட்டத்தில் மாவட்ட செயலக துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலய கல்வி அலுவலர்கள்,  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement