சுவிஸ்லாந்து நாடானது நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறப்பதற்காகவே தற்கொலை பாட் களை அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட்டுள்ளது.
ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள் நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும் . இதனால் மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும். சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைதரசனாலும், 20.95% ஒட்சிசனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் - டைஒட்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும்.
தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை இதுசார்த்து இயங்கி வரும் கடைசி புகலிடம் [Last Resort] அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த வகையில் மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடனே இந்த வசதி ஒருவருக்கு வழங்கப்படும்.
அவ்வாறு மரணிக்க விரும்விபுவோர், இந்த கேப்சியூலில் உள்ளே படுத்துக்கொண்டு கதவை மூட வேண்டும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல், நீங்கள் யார்? எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.
அதற்கு பதிலளித்தபின் பட்டனை அழுத்தினால், உள்ளே காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயு 30 வினாடிகளில் 21 சதீவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக குறைந்துவிடும். உள்ளே உள்ள நபர் மயக்க நிலையிலேயே இருப்பார். சுமார் 5 நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும்.
பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்த வகை கேப்சியூல்கள் சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கிய நாடு - எது தெரியுமா சுவிஸ்லாந்து நாடானது நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறப்பதற்காகவே தற்கொலை பாட் களை அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட்டுள்ளது. ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள் நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும் . இதனால் மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும். சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைதரசனாலும், 20.95% ஒட்சிசனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் - டைஒட்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும். தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை இதுசார்த்து இயங்கி வரும் கடைசி புகலிடம் [Last Resort] அமைப்பு வரவேற்றுள்ளது.இந்த வகையில் மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடனே இந்த வசதி ஒருவருக்கு வழங்கப்படும்.அவ்வாறு மரணிக்க விரும்விபுவோர், இந்த கேப்சியூலில் உள்ளே படுத்துக்கொண்டு கதவை மூட வேண்டும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல், நீங்கள் யார் எங்கு இருக்கிறீர்கள் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா என்ற கேள்விகளை கேட்கும்.அதற்கு பதிலளித்தபின் பட்டனை அழுத்தினால், உள்ளே காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயு 30 வினாடிகளில் 21 சதீவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக குறைந்துவிடும். உள்ளே உள்ள நபர் மயக்க நிலையிலேயே இருப்பார். சுமார் 5 நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும். பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்த வகை கேப்சியூல்கள் சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.