• Apr 02 2025

வைத்தியரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து - யாழ். வட்டுக்கோட்டையில் சம்பவம்

Chithra / Oct 29th 2024, 11:58 am
image

 

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அருகில் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீட்டர் தூரத்தில் வைத்தியர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.  

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில்,

சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


வைத்தியரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து - யாழ். வட்டுக்கோட்டையில் சம்பவம்  யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அருகில் இடம்பெற்றுள்ளது.வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீட்டர் தூரத்தில் வைத்தியர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.  இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில்,சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement