• Sep 20 2024

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வீடுகள் விற்றதால் குவிந்த பெருந்தொகை டொலர்கள்!

Chithra / Jan 25th 2023, 5:43 pm
image

Advertisement

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நடுத்தர வர்க்க வீடு விற்பனை திட்டத்தின் மூலம், இதுவரை 502,170 அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது இலங்கை நாணய பெறுமதியில் 181 மில்லியன் ரூபாவாகும்.

துபாயில் பிப்ரவரி 11 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது சர்வதேச அளவில் இத்திட்டத்துக்கான விளம்பரம் நடைபெற உள்ளது.


இவ்வருடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நடுத்தர வர்க்க வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் 2 மில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள கொழும்பு 'ஹார்பர் பீச் ரெசிடென்ஸ்' வீடமைப்புத் திட்டத்தையும் இந்த அதிகாரசபை இந்த திட்டத்திற்காக ஒதுக்கவுள்ளது.

400 வீடுகள் கொண்ட இந்த வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டை வாங்க, 40,000 டெலர்கள் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வீடுகள் விற்றதால் குவிந்த பெருந்தொகை டொலர்கள் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நடுத்தர வர்க்க வீடு விற்பனை திட்டத்தின் மூலம், இதுவரை 502,170 அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இது இலங்கை நாணய பெறுமதியில் 181 மில்லியன் ரூபாவாகும்.துபாயில் பிப்ரவரி 11 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது சர்வதேச அளவில் இத்திட்டத்துக்கான விளம்பரம் நடைபெற உள்ளது.இவ்வருடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நடுத்தர வர்க்க வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் 2 மில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.தற்போது நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள கொழும்பு 'ஹார்பர் பீச் ரெசிடென்ஸ்' வீடமைப்புத் திட்டத்தையும் இந்த அதிகாரசபை இந்த திட்டத்திற்காக ஒதுக்கவுள்ளது.400 வீடுகள் கொண்ட இந்த வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டை வாங்க, 40,000 டெலர்கள் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement