• Nov 24 2024

டுபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள டொலர்கள்! பொது மேடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் - சந்திரிக்கா

Chithra / Oct 18th 2024, 1:02 pm
image

 

கடந்த நல்லாட்சி காலத்தில் பாரிய மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போது, மேடையில் வைத்து இந்த வாக்குவாதம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அரசியல் குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான 10000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் டுபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கடந்த நல்லாட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை நாட்டுக்கு கொண்டு வர அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சிக்காலத்தில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க இதற்கு பதிலளிக்கையில், பணத்தை மீட்கும் நோக்கில் குழுவொன்று டுபாய் சென்ற போதும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணம், டுபாயிலுள்ள வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கமைய பொலிஸ் - சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவே டுபாய் சென்றதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்து ரணில் மற்றும் சந்திரிக்காவுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

டுபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள டொலர்கள் பொது மேடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் - சந்திரிக்கா  கடந்த நல்லாட்சி காலத்தில் பாரிய மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போது, மேடையில் வைத்து இந்த வாக்குவாதம் நேற்று இடம்பெற்றுள்ளது.அரசியல் குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான 10000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் டுபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கடந்த நல்லாட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அதனை நாட்டுக்கு கொண்டு வர அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.நல்லாட்சிக்காலத்தில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க இதற்கு பதிலளிக்கையில், பணத்தை மீட்கும் நோக்கில் குழுவொன்று டுபாய் சென்ற போதும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணம், டுபாயிலுள்ள வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கமைய பொலிஸ் - சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவே டுபாய் சென்றதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இது குறித்து ரணில் மற்றும் சந்திரிக்காவுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement