ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் தொடர்பாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த டான் பிரியசாத் பகிர்ந்த முகநூல் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சமூக செயற்பாட்டாளரான டான் பிரியசாத் நேற்றைய தினம் இரவு 9:10 மணியளவில் வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறு இருக்க டான் பரியசாத் தனது முகநூலில் பகிர்ந்த பதிவொன்று தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் 3 மணித்தியாலத்திற்கு முன்பதாக, ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் ஒன்று தொடர்பான நக்கல் பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.
இதன்பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலே அவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த நாட்டில் அரச பயங்கரவாதமொன்று மேலோங்கி வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டான் பிரியசாத் முகநூலில் பகிர்ந்த இறுதி பதிவு சமூகவலைத்தளங்களில் வைரல். ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் தொடர்பாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த டான் பிரியசாத் பகிர்ந்த முகநூல் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சமூக செயற்பாட்டாளரான டான் பிரியசாத் நேற்றைய தினம் இரவு 9:10 மணியளவில் வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது இவ்வாறு இருக்க டான் பரியசாத் தனது முகநூலில் பகிர்ந்த பதிவொன்று தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அதாவது குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் 3 மணித்தியாலத்திற்கு முன்பதாக, ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் ஒன்று தொடர்பான நக்கல் பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.இதன்பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலே அவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இந்த நாட்டில் அரச பயங்கரவாதமொன்று மேலோங்கி வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.