• Sep 20 2024

யாழில் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு...!samugammedia

Sharmi / Apr 28th 2023, 11:26 am
image

Advertisement

2022/2023 ம் ஆண்டு பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதல் நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரம், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,வடபகுதி கடற்படை கட்டளை அதிகாரி,இலங்கை இரானுவத்தின் 51கட்டளை தளபதி, வேலணை பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வேலணை பிரதேச செயலர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 220 பயனாளிகளுக்கு அரிசிப்பொதி அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழில் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு.samugammedia 2022/2023 ம் ஆண்டு பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.இதன் முதல் நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரம், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,வடபகுதி கடற்படை கட்டளை அதிகாரி,இலங்கை இரானுவத்தின் 51கட்டளை தளபதி, வேலணை பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது வேலணை பிரதேச செயலர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 220 பயனாளிகளுக்கு அரிசிப்பொதி அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement