• Nov 23 2024

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் கையளிப்பு...!samugammedia

Sharmi / Dec 22nd 2023, 1:24 pm
image

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) ரோட்டரி கழகத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு தெற்கு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில், அவுரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடன் சர்வதேச ரொட்டரி கழகங்களினால் 6.6 கோடி பெறுமதியான குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டது.

விருத்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டது.

தொடர்ந்து 6.6 கோடி ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.

2017ம் ஆண்டு முதல் குறித்த பரிசோதனை வசதி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இல்லாமையால், நோயாளர்கள் சிரமங்களை எதிர் கொண்டதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது மாங்குளம், வடமராட்சி கிழக்கு, புதுக்குடியிருப்பு, வடமராட்சி கிழக்கு, மூங்கிலாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரத்தின் மூலம், சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களிற்கான பரிசோதனைகள் தை மாதம் முதல் முன்னெடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.

நிகழ்வில் ரொட்டரி கழக உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் கையளிப்பு.samugammedia கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) ரோட்டரி கழகத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தெற்கு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில், அவுரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடன் சர்வதேச ரொட்டரி கழகங்களினால் 6.6 கோடி பெறுமதியான குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டது.விருத்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து 6.6 கோடி ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.2017ம் ஆண்டு முதல் குறித்த பரிசோதனை வசதி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இல்லாமையால், நோயாளர்கள் சிரமங்களை எதிர் கொண்டதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது மாங்குளம், வடமராட்சி கிழக்கு, புதுக்குடியிருப்பு, வடமராட்சி கிழக்கு, மூங்கிலாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரத்தின் மூலம், சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களிற்கான பரிசோதனைகள் தை மாதம் முதல் முன்னெடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.நிகழ்வில் ரொட்டரி கழக உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement