கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் மக்கள் போராட்டம் 5 நாட்களாக நேற்று இடம்பெற்று வந்த நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது.
தமிழ் முஸ்லீம் மக்கள் இந்த பிரதேசத்தில் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள்.இந்த கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு நான் ஒரு அன்பான அழைப்பு விடுக்கின்றேன்.
இங்குள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ விரும்புகின்றார்கள்.எனவே முஸ்லீம் மக்களின் ஆதரவினை நாம் கோரி நிற்கின்றோம்.
கல்முனை தெற்கு பிரதேச செயலகம் வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான அதிகாரம் செலுத்துவதை தடுத்து நிறுத்தவற்கு உதவ வேண்டும்.
உங்களின் ஆதரவுடன் தான் இங்கு இன நல்லுறவினை நாம் ஏற்படுத்த முடியும். ஒரு சில அரசியல் பிரமுகர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு பிரதேச செயலகமாக செயற்படுத்த முடியாதவாறு தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி கொண்டிருப்பதானது மிகத் துரதிஸ்ட வசமானது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதை ஒரு பிரதேச செயலகமாக 1993 ஆண்டு போன்று செயற்பட விடுவதுடன் அதற்கு இடையூறாக இருக்க கூடாது. தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நீங்கள் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் குரோதங்களை உருவாக்கி அரசியல் நடத்தாதீர். கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் மக்கள் போராட்டம் 5 நாட்களாக நேற்று இடம்பெற்று வந்த நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது.தமிழ் முஸ்லீம் மக்கள் இந்த பிரதேசத்தில் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள்.இந்த கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு நான் ஒரு அன்பான அழைப்பு விடுக்கின்றேன்.இங்குள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ விரும்புகின்றார்கள்.எனவே முஸ்லீம் மக்களின் ஆதரவினை நாம் கோரி நிற்கின்றோம்.கல்முனை தெற்கு பிரதேச செயலகம் வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான அதிகாரம் செலுத்துவதை தடுத்து நிறுத்தவற்கு உதவ வேண்டும்.உங்களின் ஆதரவுடன் தான் இங்கு இன நல்லுறவினை நாம் ஏற்படுத்த முடியும். ஒரு சில அரசியல் பிரமுகர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு பிரதேச செயலகமாக செயற்படுத்த முடியாதவாறு தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி கொண்டிருப்பதானது மிகத் துரதிஸ்ட வசமானது.பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதை ஒரு பிரதேச செயலகமாக 1993 ஆண்டு போன்று செயற்பட விடுவதுடன் அதற்கு இடையூறாக இருக்க கூடாது. தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நீங்கள் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.