• Nov 23 2024

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்! வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு

Chithra / Oct 17th 2024, 10:51 am
image

 

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழைபெய்யக்கூடும். 

அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும். 

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன்படி, வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என   திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு  முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழைபெய்யக்கூடும். அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும். சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என   திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement