• Sep 19 2024

யாழின் அபிவிருத்தியை செயலில் செய்து காட்டுவேன்-பிரபல வர்த்தகர் சவால்!

Sharmi / Jan 21st 2023, 12:53 pm
image

Advertisement

அரசாங்கத்திற்கே நாம் தான் பணம் கொடுத்துள்ளோம்.இதற்காக ஒரு ருபாய் பணத்தை கூட நாம் எடுக்க மாட்டோம். அரசாங்கத்திற்கே அதனையும்  திருப்பி கொடுக்கின்றோம். என யாழின் பிரபல வர்த்தகர் தியாகேந்திரன் வாமதேவன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.


கட்டுப்பணம் கூட இரண்டு வருடங்களிற்கு எமக்கு தேவையில்லை என்று கூறுகின்றோம். அதனையும் மீண்டும் திருப்பி கொடுக்கின்றோம். 
மாநகரசபையில் மட்டும் சுயேட்சையாக  போட்டியிட நாம் தீர்மானித்துள்ளோம்.

எங்களை பொறுத்த மட்டில் மிகுந்த ஒரு நம்பிக்கையில் தான் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த தேர்தல் களத்தினை பெரிய ஒரு வாய்ப்பாகவே கருதுகின்றோம். 

ஏனெனில், சுயேச்சையினுடைய தேவை இன்று மக்களால் உணரப்பட்டு இருக்கிறது. 

 புதிய ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி கொள்ளவும் கட்சிகள் மத்தியில் இருக்கின்ற நிலையில்லா கொள்கைகளும், செயற்பாடுகளும் கடந்த காலத் தோல்விகளும் மிக தெளிவாக கூறுகின்றது.

ஆகவே புதிய ஒரு அரசிய கட்டமைப்பை  இந்த பிரதேசத்தில் உருவாக்க வேண்டிய கடப்பாடுள்ளது. அது மக்கள் ஆணையிலே தங்கியுள்ளது. 

சுயேச்சையாக இந்த பிரதேச வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் இணைந்து, இளைஞர்களை  உள்வாங்கி பெண்களுக்கான உரிமைகளும் வழங்கப்பட்டு அவர்களினுடைய பங்களிப்புடனும் போ ட்டியிடுகின்றோம். எனவும்  தெரிவித்துள்ளார்.

யாழின் அபிவிருத்தியை செயலில் செய்து காட்டுவேன்-பிரபல வர்த்தகர் சவால் அரசாங்கத்திற்கே நாம் தான் பணம் கொடுத்துள்ளோம்.இதற்காக ஒரு ருபாய் பணத்தை கூட நாம் எடுக்க மாட்டோம். அரசாங்கத்திற்கே அதனையும்  திருப்பி கொடுக்கின்றோம். என யாழின் பிரபல வர்த்தகர் தியாகேந்திரன் வாமதேவன் தெரிவித்துள்ளார்.தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.கட்டுப்பணம் கூட இரண்டு வருடங்களிற்கு எமக்கு தேவையில்லை என்று கூறுகின்றோம். அதனையும் மீண்டும் திருப்பி கொடுக்கின்றோம். மாநகரசபையில் மட்டும் சுயேட்சையாக  போட்டியிட நாம் தீர்மானித்துள்ளோம்.எங்களை பொறுத்த மட்டில் மிகுந்த ஒரு நம்பிக்கையில் தான் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த தேர்தல் களத்தினை பெரிய ஒரு வாய்ப்பாகவே கருதுகின்றோம். ஏனெனில், சுயேச்சையினுடைய தேவை இன்று மக்களால் உணரப்பட்டு இருக்கிறது.  புதிய ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி கொள்ளவும் கட்சிகள் மத்தியில் இருக்கின்ற நிலையில்லா கொள்கைகளும், செயற்பாடுகளும் கடந்த காலத் தோல்விகளும் மிக தெளிவாக கூறுகின்றது.ஆகவே புதிய ஒரு அரசிய கட்டமைப்பை  இந்த பிரதேசத்தில் உருவாக்க வேண்டிய கடப்பாடுள்ளது. அது மக்கள் ஆணையிலே தங்கியுள்ளது. சுயேச்சையாக இந்த பிரதேச வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் இணைந்து, இளைஞர்களை  உள்வாங்கி பெண்களுக்கான உரிமைகளும் வழங்கப்பட்டு அவர்களினுடைய பங்களிப்புடனும் போ ட்டியிடுகின்றோம். எனவும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement