சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சமூக ஊடக தளங்கள் ஊடாக இடம்பெறும் இணையவழி மற்றும் பண மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், விழிப்புணர்வுடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு மையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் பண்டிகைக் காலத்தில் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி உத்திகளைச் செயல்படுத்தி வருவதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அரச சேவை வழங்கும் நிறுவனங்கள், திணைக்களங்கள், பிரபலமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற போர்வையில் பொதுமக்கலை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து குறிப்பிடத்தக்க தகவல்கள் பதிவாகியுள்ளன.
இந்த மோசடி செய்பவர்கள் போலியான சலுகைகள், விசேட தள்ளுபடிகள், பணப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்குவதாகக் கூறி கவர்ச்சிகரமான குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் ஊடாகப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் மோசடியான இணைய இணைப்புகளைப் பகிர்ந்து, அவற்றின் ஊடாக பணம் செலுத்துமாறு அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளினால் பலரது வங்கி கணக்குகளிலிருந்து நேரடியாகப் பணம் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் 'புத்தாண்டு குமாரி' போன்ற போட்டிகள் மூலம் புகைப்படங்களைப் பெற்று, அவற்றை தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்துமாறு இலங்கை CERT நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது:
சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்ய வேண்டாம்.
தனிப்பட்ட தகவல்கள் (தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி விபரங்கள் போன்றவை) மற்றும் புகைப்படங்களைப் பகிர வேண்டாம்.
ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.
அரசு நிறுவனங்களோ அல்லது நம்பகமான தனியார் நிறுவனங்களோ சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் அல்லது அறியப்படாத இணைப்புகள் ஊடாக ஒருபோதும் பொதுமக்களின் இரகசியத் தகவல்களைக் கோரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்தத் பண்டிகைக் காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் சமூக ஊடகச் செய்திகள், குறுஞ்செய்திகள், பணக் கோரிக்கைகள் அல்லது சலுகைகள் தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையை நம்பகமான வழிகளில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை CERT நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
புத்தாண்டு சலுகை என நம்பி பணத்தை இழக்காதீர்கள்;வெளியாகிய இணைய மோசடி எச்சரிக்கை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சமூக ஊடக தளங்கள் ஊடாக இடம்பெறும் இணையவழி மற்றும் பண மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், விழிப்புணர்வுடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு மையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தத் பண்டிகைக் காலத்தில் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி உத்திகளைச் செயல்படுத்தி வருவதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரச சேவை வழங்கும் நிறுவனங்கள், திணைக்களங்கள், பிரபலமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற போர்வையில் பொதுமக்கலை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து குறிப்பிடத்தக்க தகவல்கள் பதிவாகியுள்ளன.இந்த மோசடி செய்பவர்கள் போலியான சலுகைகள், விசேட தள்ளுபடிகள், பணப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்குவதாகக் கூறி கவர்ச்சிகரமான குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் ஊடாகப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் மோசடியான இணைய இணைப்புகளைப் பகிர்ந்து, அவற்றின் ஊடாக பணம் செலுத்துமாறு அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான மோசடிகளினால் பலரது வங்கி கணக்குகளிலிருந்து நேரடியாகப் பணம் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் 'புத்தாண்டு குமாரி' போன்ற போட்டிகள் மூலம் புகைப்படங்களைப் பெற்று, அவற்றை தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்துமாறு இலங்கை CERT நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது:சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்ய வேண்டாம்.தனிப்பட்ட தகவல்கள் (தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி விபரங்கள் போன்றவை) மற்றும் புகைப்படங்களைப் பகிர வேண்டாம்.ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.அரசு நிறுவனங்களோ அல்லது நம்பகமான தனியார் நிறுவனங்களோ சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் அல்லது அறியப்படாத இணைப்புகள் ஊடாக ஒருபோதும் பொதுமக்களின் இரகசியத் தகவல்களைக் கோரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இந்தத் பண்டிகைக் காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் சமூக ஊடகச் செய்திகள், குறுஞ்செய்திகள், பணக் கோரிக்கைகள் அல்லது சலுகைகள் தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையை நம்பகமான வழிகளில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை CERT நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.