• Sep 20 2024

பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் - பிரதமர் தினேஷ் இப்படி வலியுறுத்து!

Tamil nila / Feb 17th 2023, 9:24 am
image

Advertisement

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். எனவே, அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்."


இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறியதாவது:-


"உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் அஹிம்சை வழியிலும், ஆயுத வன்முறை வழியிலும் போரிட்ட தலைவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு.


அதனால் அவர்கள் உயிரிழந்த பின்னரும் தங்கள் மனங்களில் உயிர் வாழ்கின்றார்கள் என்று சிலர் கருதுகின்றார்கள்.


ஆனால், பிரபாகரன் விடயத்தில் அது சற்று வேறுபாடாக இருக்கின்றது. இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் போரிட்டு மரணித்த அவரை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.


பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்." - என்றார்.

பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் - பிரதமர் தினேஷ் இப்படி வலியுறுத்து "தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். எனவே, அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்."இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறியதாவது:-"உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் அஹிம்சை வழியிலும், ஆயுத வன்முறை வழியிலும் போரிட்ட தலைவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு.அதனால் அவர்கள் உயிரிழந்த பின்னரும் தங்கள் மனங்களில் உயிர் வாழ்கின்றார்கள் என்று சிலர் கருதுகின்றார்கள்.ஆனால், பிரபாகரன் விடயத்தில் அது சற்று வேறுபாடாக இருக்கின்றது. இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் போரிட்டு மரணித்த அவரை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement