• Jul 27 2024

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்..! முகக்கவசம் அணியுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல்

Chithra / May 28th 2024, 8:02 am
image

Advertisement

 

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

இந்நாட்களில் இன்புளுவென்சா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருகின்றது.

அதில் இன்புளுவென்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். 

காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது இன்புளுவென்சா காய்ச்சலாக இருக்கலாம். 

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் குளிர் காலத்தில் இன்புளுவென்சா வைரஸ் பரவும் எனவும், வைரஸ் பரவாமல் தடுக்க முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்ப்ளூயன்ஸா வைரஸுக்கு தடுப்பூசிகள் இல்லை எனவும் பாராசிட்டமால் மருந்தை செலுத்தி, 

தண்ணீர் மற்றும் இயற்கையான திரவங்களை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம். முகக்கவசம் அணியுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல்  நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.இந்நாட்களில் இன்புளுவென்சா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருகின்றது.அதில் இன்புளுவென்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது இன்புளுவென்சா காய்ச்சலாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குளிர் காலத்தில் இன்புளுவென்சா வைரஸ் பரவும் எனவும், வைரஸ் பரவாமல் தடுக்க முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்ப்ளூயன்ஸா வைரஸுக்கு தடுப்பூசிகள் இல்லை எனவும் பாராசிட்டமால் மருந்தை செலுத்தி, தண்ணீர் மற்றும் இயற்கையான திரவங்களை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement