தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்ற கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவர்களை ஒன்றாக சங்கிலியால் பிணைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள நபர்களும் மனிதர்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்பட தகுதியானவர்கள் என்றும் அதிகாரிகளுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழு ஒன்றை அதிகாரிகள், நேற்று, நீதிமன்ற அறைக்குள் கொண்டு வந்ததைக் கவனித்த பின்னர், மேலதிக நீதிவான் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் மேலதிக நீதிவான் திறந்த நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்தநிலையில், தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை முறையான நடைமுறைகளின்படி நீதிமன்ற அறையில் வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் - சிறை அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுரை தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்ற கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவர்களை ஒன்றாக சங்கிலியால் பிணைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தடுப்புக்காவலில் உள்ள நபர்களும் மனிதர்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்பட தகுதியானவர்கள் என்றும் அதிகாரிகளுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழு ஒன்றை அதிகாரிகள், நேற்று, நீதிமன்ற அறைக்குள் கொண்டு வந்ததைக் கவனித்த பின்னர், மேலதிக நீதிவான் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் மேலதிக நீதிவான் திறந்த நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.இந்தநிலையில், தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை முறையான நடைமுறைகளின்படி நீதிமன்ற அறையில் வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.