ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவுகோரி யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரசார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் இன்று (07) காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் ஸரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வை யாழ். மத்திய பேரந்து நிலையத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ் நகரில் குறித்த நிகழ்வை ஆரம்பித்துவைத்து பிரசார நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குறித்த "ரணிலை அறிந்து கொள்வோம்" நிகழ்வானது இலங்கைத்தீவின் 09 மாகாணங்களிலும் உள்ள 160 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும், 341 உள்ளுராட்சி மன்றங்கள், 4984 வட்டாரங்கள், 14026 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 53,896 கிராம வீதிகளை உள்ளடக்கியவகையிலும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து தூங்கிய துண்டுப்பிரசுரங்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் சின்னமான “காஸ் சிலிண்டருக்கு” வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் இதன் போது மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
ரணிலின் வெற்றியை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய டக்ளஸ், சுசில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவுகோரி யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரசார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் இன்று (07) காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் ஸரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வை யாழ். மத்திய பேரந்து நிலையத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ் நகரில் குறித்த நிகழ்வை ஆரம்பித்துவைத்து பிரசார நடவடிக்கையை மேற்கொண்டனர்.குறித்த "ரணிலை அறிந்து கொள்வோம்" நிகழ்வானது இலங்கைத்தீவின் 09 மாகாணங்களிலும் உள்ள 160 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும், 341 உள்ளுராட்சி மன்றங்கள், 4984 வட்டாரங்கள், 14026 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 53,896 கிராம வீதிகளை உள்ளடக்கியவகையிலும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகின்றது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து தூங்கிய துண்டுப்பிரசுரங்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் சின்னமான “காஸ் சிலிண்டருக்கு” வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் இதன் போது மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.