• Nov 22 2024

தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர் அர்ச்சுனா - எம்.பி. பதவி பறிபோகும் நிலையில்!

Chithra / Nov 22nd 2024, 11:58 am
image

 

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின்  பதவி பறிக்கப்படலாமென தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அர்ச்சுனா இராமநாதன், முறைப்படி அரச வேலையை விட்டு விலகாது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தில் பணியாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது. 

இந்நிலைமையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இது சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த சட்டச்சிக்கலால் அவரது பதவி நிச்சயம் பறிக்கப்படும் என சட்டவாளர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவும் தனது தொழிலை விட்டு விலகாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு  நேற்றைய தினம் (21) ஆரம்பமான போது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வைத்தியர் அர்ச்சுனா அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமையும் பேசுபொருளாக  சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர் அர்ச்சுனா - எம்.பி. பதவி பறிபோகும் நிலையில்  யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின்  பதவி பறிக்கப்படலாமென தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அர்ச்சுனா இராமநாதன், முறைப்படி அரச வேலையை விட்டு விலகாது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தில் பணியாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது. இந்நிலைமையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இது சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, இந்த சட்டச்சிக்கலால் அவரது பதவி நிச்சயம் பறிக்கப்படும் என சட்டவாளர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவும் தனது தொழிலை விட்டு விலகாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு  நேற்றைய தினம் (21) ஆரம்பமான போது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வைத்தியர் அர்ச்சுனா அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமையும் பேசுபொருளாக  சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement