• Aug 15 2025

அநுர அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிப்பு!

Chithra / Aug 15th 2025, 9:31 am
image

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. 

நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நேற்று மாலை கூடிய பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி,  இந்த வரைவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை அடுத்த வாரம்  தொடங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த பரந்த கூட்டணியின் இறுதி வரைவு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தயாரிக்கப்பட உள்ளது. 

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், எதிர்காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எதிர்க்கட்சி இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அதன் பங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, மிலிந்த மொரகொட, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, ரமேஷ் பத்திரன, மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், நிஷாம் காரியப்பர், மயந்த திசாநாயக்க, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று இதில் கலந்துகொண்டனர்.

அநுர அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் பரந்த கூட்டணியின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நேற்று மாலை கூடிய பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,  இந்த வரைவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை அடுத்த வாரம்  தொடங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பரந்த கூட்டணியின் இறுதி வரைவு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தயாரிக்கப்பட உள்ளது. தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், எதிர்காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எதிர்க்கட்சி இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அதன் பங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, மிலிந்த மொரகொட, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, ரமேஷ் பத்திரன, மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், நிஷாம் காரியப்பர், மயந்த திசாநாயக்க, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று இதில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement