• Aug 02 2026

உயர்தர மாணவர்களின் மேலதிக வகுப்புகளுக்கு அதிரடித் தடை!

Tamil nila / Aug 1st 2026, 9:02 pm
image

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அத்துடன் 2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உயர்தர மாணவர்களின் மேலதிக வகுப்புகளுக்கு அதிரடித் தடை 2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.அத்துடன் அத்துடன் 2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement