லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸாவியா நகரில் முக்கிய மின் நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில், மின் நிலையத்தில் தீ ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸாவியா பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 45 லட்சம் லிட்டர் பெட்ரோல் கொண்ட சேமிப்பு தொட்டி தீப்பற்றி பின்னர் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸாவியா நகரம் லிபியாவின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக இருப்பதால், தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நாட்டின் எரிபொருள் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்புக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
லிபியாவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸாவியா நகரில் முக்கிய மின் நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில், மின் நிலையத்தில் தீ ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஸாவியா பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 45 லட்சம் லிட்டர் பெட்ரோல் கொண்ட சேமிப்பு தொட்டி தீப்பற்றி பின்னர் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸாவியா நகரம் லிபியாவின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக இருப்பதால், தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நாட்டின் எரிபொருள் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்புக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.